அநுராதபுரத்தில் ட்ரகன் பழ உற்பத்தி வெற்றி

அநுராதபுர மாவட்டத்தில் ட்ரகன் பழ உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது இந்த ட்ரகன் பழ உற்பத்தி பரவலாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. உலர் கால நிலை ட்ரகன் பழ மரங்களுக்கு ஈடுகொடுப்பதாலும், குறைந்த உழைப்புப் பயன்படுத்தப்படுதல், குறைந்த கிருமி, பூச்சிகளின் தாக்கம் மற்றும் கிருமி நாசினி, பசளை உபயோகம் போன்றவற்றுடன் சந்தையில் அதிக கேள்வி மற்றும் விரும்பத்தக்க சிறந்த விலை காணப்படும் உற்பத்தி என்பதாலும் ட்ரகன் பழங்ளின் உற்பத்தி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

அவ்வாறே ட்ரகன் பழ செடிகள் மேடைப் பயிராகவும் வீட்டுத் தோட்டப் பயிராகவும் செய்கைபண்ணப்படுகிறது. இதனால் ஜேம், ஜெலி, பழச்சாறு மற்றும் வைன் போன்ற பெறுமதி சேர் உற்பத்திகளும் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் சிலர் ட்ரகன் மரத்தின் பூவை கறியாக உணவில்; சேர்த்துக் கொள்கிறார்கள். இப்பழம் புற்றுநோய்த் தடுப்பு, நீரிழிவைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுடன் நிறை உணவாக இரத்தத்தில் கொலஸ்ரோலிய அளவு மற்றும் குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுதல் இப்பழத்திற்கு அதிக கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் பாதையில் வரும்; நாகத்தின் இயல்புக்கு ஒத்ததாக இப்பழம் காணப்படுவதனால் அதற்கு ட்ரகன் பழம் எனும் பெயர் வந்துள்ளது. அவ்வாறே கற்றாளைக் குடும்பத்தைச் சேர்ந்ததனால் முள்ளில் முளைத்த பூ மற்றும் அதனுடன் சேர்ந்த பூ ராணியாக அடையாளம் காட்டப்படுகிறது.

விட்டமின், தாதுப் பொருட்கள் மற்றும் கனியுப்பக்கள் நிறைந்த பழமாக அறிமுகமாகும் ட்ரகன் பழம் நார்ச்சத்துக்கள் மிகுந்த உணவாக உடலுக்கு சிறந்த ஆரோக்கியமிக்கதாகும். ட்ரகன் பழம் சாதாரணமாக இலங்கையில் பழங்களின் உள்ளே சதை நிறைந்து வெள்ளை மற்றும் கடும் ரோஸ் நிறங்களில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன.

2021ஆம் ஆண்டில் கிராமமாக கெகிராவ குடாஎலகமுவ பிரதேசத்தில் இந்த உற்பத்தி ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது 50 குடும்பங்கள் ஈடுபட்டதுடன், தற்போது ஒரு மரத்தில் 10 காய்கள் காய்க்கின்றன. பல தடவைகள் பழங்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வுற்பத்தி மல்வத்து ஒய திட்ட அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு முன்னுதாரணமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காணப்படும் அதிகரித்த கேள்வி காரணமாக உற்பத்தியாளர்கள் வீட்டுத்தோட்டமாகவும் பெரிய நிலப்பரப்பிலும் செய்கை செய்கின்றார்கள. இப்பழம் நவீன சந்தைகள் மற்றும் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையமாக இடம்பெறுவதுடன் தற்போது ஒவ்வொரு நகர

தற்போது உலகின் அதிகமான நாடுகளில் பணப் பயிராக செய்கை பண்ணப்படும் இப்பழம் வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பல்வேறு முன்னணி உற்பத்திகளுள் ஒன்றாக முன்னேற்றுவதன் அவசியம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் இந்த ட்ரகன் பழ உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.