Coolie: ரஜினியுடன் இணையும் நாகர்ஜுனா! – இருவருக்குமான இந்த கனெக்ட் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

‘மாநகரம்’ திரைப்படத்திற்குப் பிறகு திரைக்கதை பணிகளுக்காகத் தனது இணை இயக்குநர் சந்துரு அன்பழகனுடன் இணைந்திருக்கிறார் லோகேஷ். ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனைத் தாண்டி தனது வழக்கமான தொழில்நுட்பக் குழுவுடன் கைகோத்திருக்கிறார்.

‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் நடிக்கிறார் என்ற தகவலை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் செளபின் சாஹிர். இதையும் தாண்டி படத்தில் வேறு எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவலைத் தயாரிப்பு நிறுவனம் தினமும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி இன்றைய தின அப்டேட்டில் தெலுங்கிலிருந்து நடிகர் நாகர்ஜூனா நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக இந்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்கள்.

Nagarjuna in Coolie

1991-ம் ஆண்டு கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது ‘சாந்தி கிராந்தி’ என்ற திரைப்படம். அதாவது, தமிழில் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற தலைப்பில் உருவாகி வெளியாகியிருந்த திரைப்படம்தான் அது. தமிழ் மற்றும் இந்தி வெர்ஷனில் ரஜினி கதாநாயகனாக நடித்திருப்பார். தெலுங்கு வெர்ஷனில் நாகர்ஜூனா நடித்திருப்பார். கன்னடத்தில் நடிகர் வி. ரவிசந்திரன் நடித்திருந்தார். இப்படி ஒரே படத்தின் வெவ்வேறு வெர்ஷன்களில் ரஜினியும் நாகர்ஜூனாவும் நடித்த கனெக்ட் இருக்கிறது. ஆனால், இப்போதுதான் முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதுமட்டுமின்றி தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்திலும் நாகர்ஜூனா நடித்து வருகிறார்.

‘கூலி’ பிரமாண்டமான பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருவதால் மலையாளத்திலிருந்து செளபின் சாஹிர், தெலுங்கிலிருந்து நாகர்ஜூனா ஆகியோரை நடிக்க கமிட் செய்திருக்கிறார்கள். கன்னடத்திலிருந்து நடிகர் உபேந்திரா ‘கூலி’யில் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியிலிருந்து எந்த உச்ச நட்சத்திரம் ‘கூலி’ திரைப்படத்தில் இணைந்தால் ரஜினியுடன் மாஸ் காம்போவாக இருக்கும் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.