புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார்.
இந்நிலையில், ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். கடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின்போது அவர் சிறுவர்களுடன் இணைந்து செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.மேலும், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை போல், விரைவில் ‘பாரத் டோஜோ’ யாத்திரை தொடங்கும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
Related Tags :