சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளதால், சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடற்கரை அருகில் உள்ள சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான […]