சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின்ன் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பின்போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, […]