அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பாலாஜி, யுகி பாம்ப்ரி ஜோடிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா) – குய்டோ ஆந்த்ரேஜி (அர்ஜென்டினா) ஜோடி 5-7, 6-1, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியஸ் (நியூசிலாந்து) – மிகுல் ரியேஸ் வாரிலா (மெக்சிகோ) ஜோடியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி (இந்தியா) – அல்பனோ ஒலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ரையான் செஜ்ஜெர்மேன் – பாட்ரிக் திஹாக் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.