தலைநகர் சென்னையில், ‘ஃபார்முலா 4’ கார் ரேஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 31 (நாளை) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் சென்னையில் நடக்கவிருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் தாண்டி இந்தப் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது.
இந்த நிலையில், கார் பந்தயம் குறித்து தமிழ் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், “இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் ரேஸை, சென்னையில் நடத்துவதற்கு வாழ்த்துகள். அவரின் இந்த முக்கியமான முயற்சி சென்னையின் அந்தஸ்தை உயர்த்தி, முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியா தனது இலைக்கை அடைய வழிவகுக்கும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Congratulations @udhaystalin bro on India’s first On Street Night F4 Championship and Indian Racing League. This pathbreaking sporting initiative will elevate Chennai’s stature as India’s destination for marquee sports events
— Dhanush (@dhanushkraja) August 29, 2024
இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும், இது தொடர்பாக எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஃபார்முலா 4 ரேஸ் தொடர்பாக அவர், “நமது சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுக்கு தைரியம், திறன், துடிப்பான இளமை ஆகியவை முக்கியமானது.
Our Chennai gets the thrill of F4 street racing! This sport demands courage, skill & youthfulness – a perfect fit for our vibrant madras! Appreciation to @Udhaystalin bro for this bold initiative to make motorsport history in TN and making Chennai Cooler.
— Karthi (@Karthi_Offl) August 30, 2024
நம் துடிப்பான மெட்ராஸுக்கு இந்த கார் ரேஸ் சரியான பொருத்தம். இந்த துணிச்சலான முயற்சியைக் கையிலெடுத்து தமிழ்நாட்டில் மோட்டார் விளையாட்டு வரலாற்றை உருவாக்குவதற்கு, உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.” என பதிவிட்டிருக்கிறார்.