Bollywood: `மாதவன் டு அனுராக் காஷ்யப்’ – பாலிவுட்டில் இது ரீ-ரிலீஸ் காலம்!

பெரிய படங்களின் ரிலீஸ் இல்லாத சமயத்தில் ‘ரீ – ரிலீஸ்’ என்ற யுக்தி பயன்படுத்தப்படுவது வழக்கம்தான்.

ஆனால் அதுவே தற்போது டிரண்டாக மாறியிருக்கிறது. சமீபத்தில் கோலிவுட்டில் விஜய்யின் ‘கில்லி’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷின் ‘3’ ஆகிய படங்கள் ரீ ரிலீஸின் மாஸ் காட்டின. தற்போது பாலிவுட்டும் ரீ- ரிலீஸில் மாஸ் காட்டவிருக்கிறது. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டடித்த முக்கியமான திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் ரீ ரிலீஸாகியிருக்கிறது.

Gangs of wasseypur

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்’, ‘தும்பட்’, மாதவனின் ‘ரெக்னா ஹாய் தேரா தில் மெய்ன்’ ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் திரைக்கு வந்திருக்கிறது. பாலிவுட் ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான இத்திரைப்படங்களையெல்லாம் திரையில் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள்.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்’ திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்த இரண்டு பாகங்களையும் திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘ரெக்னா ஹாய் தேரா தில் மெய்ன்’ திரைப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸாகயிருக்கிறது. இது தமிழில் வெளியான ‘மின்னலே’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் இன்றும் முக்கியமான ஹாரர் திரைப்படங்களில் ஒன்றாக பேசப்படும் ‘தும்பட்’ திரைப்படம்தான் இந்த வாரம் வெளியான ரீ ரிலீஸ்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Rehna hein tera dil mein poster

இதையும் தாண்டி டோலிவுட்டிலும் இந்த வாரம் சில திரைப்படங்கள் ரீ ரிலிஸாகியிருக்கிறது. நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1989-ல் வெளியான ‘ஷிவா’ திரைப்படமும், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘மாஸ்’ திரைப்படமும் இந்த வாரம் ரீ வெளியாகியிருக்கிறது.

உங்களுக்கு பிடித்த வேறு எந்த இந்தி படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள் ரசிகர்களே!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.