சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்குபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது. அதன்படி, பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். […]