எவ்வித தரமற்ற மருந்துகளையும் பெறுகை முறையில்  பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை… 

உயர்தரமற்ற எந்தவொரு மருந்துப் பொருளையும் பெறுகை முறையின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 

இவ் ஊடக கலந்துரையாடலில் விடயங்களைத் தெளிவு படுத்திய சுகாதார அமைச்சர்;….

 

“தற்போது சுகாதாரத் தறை தொடர்பாகவும், மருந்து கொள்வனவு குறித்தும் தவறான மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பல ஊடகங்களில்  வழங்கப்படுகின்றமை குறித்து தெளிவுபடுத்துவதற்காக இவ் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

மருந்து தொடர்பாக சுகாதார அமைச்சு எவ்வித அவசர மருந்துகளையும் கொள்வனவு செய்யவில்லை.தரமற்ற எந்தவொரு மருந்து வகையையும் பெறுகை முறையில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எச்சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை என்றும் குறிப்பிட விரும்புகின்றேன்.

 

 இது தொடர்பாக  இரண்டு விடயங்களின் அடிப்படையில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

 

ஒன்று இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கிடையே ஏற்படடுள்ள ஒப்பந்தங்கள் ஊடாக  இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு இணங்க அவர்களின் யோசனை முறைகளுக்கு ஏற்பவும்  “மூலிகை மருந்து வியாபாரம்” எனும் பெயரில் அரச நிறுவனங்கள் ஊடாக உயர்தரத்திலான மருந்துகளை இந்திய மக்களுக்கு வழங்கி அயல் நாடுகளுக்கும் மருந்துகளை விநியோகிக்கும் முறைமை ஒன்று காணப்படுகிறது.

 

“சுகாதார அமைச்சராக தான் செயல்படும் காலம் வரை மற்றும் இந்த அதிகாரிகள் சபை செயல்படும் வரை நாம் சட்டவிரோத அல்லது ஒழுங்கு விதிகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு சம்பந்தப்படுவதற்கு எமக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. அவ்வாறு இடம்பெறவும் இல்லை. இனியும் அது இடம்பெறாது. கடந்த காலங்களில் நோயாளர்களுக்கு வழங்க முடியாமல் போன 37 வகை மருந்துகளை ஒழுங்கு விதிகளுடன் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

செய்தித்தாள்களில் பொய்யான ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுக்காக எவ்வித அதிகாரியும் மருந்துகளுக்கான பெறுகைக்குப் பதிலாக எப்போதும் இந்தியாவுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு செல்லவில்லை. பல தடவைகள் சென்று பயிற்சி நிகழ்வுகள் மற்றும் உற்பத்தி உட்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டன.

 

ஔடதங்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் அளித்த மருந்துகள் இந்தியாவுக்கு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகும் அச்செய்திக்கு அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கு ஒப்பந்தத்திற்கு மருந்து விநியோகம் செய்வது தொடர்பாக முன்வைத்த காரணங்களாகும். 

 

அவை தனியார் துறை சம்பந்தப்பட்டவை அல்ல. உயர்தரத்திலான மருந்துகள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதனை நாம் நாட்டு மக்களுக்காக செய்வோம். ஆனால் அது தொடர்பாக இறுதி ஒப்பந்தத்திற்கு இன்னும் தயார் இல்லை. அது மிகவும் வெளிப்படைத் தன்மைமிக்கதாக இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். 

 

 

ரமேஷின் மருந்து இறக்குமதியை ஜனாதிபதி இடைநிறுத்துவார் என செய்திகள் வெளியாகின்றன. அதில் எவ்வித நியாயமான அடிப்படைகளும் அல்லது அவ்வாறான ஒரு செயற்பாடு இடம்பெறவுமில்லை. அவ்வாறு செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை. ஜனாதிபதியும் அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு முடியுமான வரை சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்குமாறு கூறுகிறார்.

 

 இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வருவதற்கு இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் இல்லை. அவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறுவதாயின் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்   கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதில்லை.

 

“புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இன்னும் காலமில்லை. அரசாங்கங்கள் இரண்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. நான் இலங்கையின் மருந்துக் கம்பனியின் நிர்வாக சபை உறுப்பினராக செயற்பட்டுள்ளேன். அது என்னுடைய சுயவிபரக் கோவையில் உள்ளது. அவ்வாறு கூறப்படும் கம்பனியில் நான் வேலை செய்திருக்கவில்லை.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.