பாரிஸ் பாராலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்த போட்டித் தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம் வென்றுள்ளது. ஆடவர் எஸ் எல் 3 பேட்மிண்டன் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தலை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் நிதேஷ்குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வெற்றிபெற்றார்.