ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோ,

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆகஸ்ட் 29 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை என பதிவிட்டுள்ளார்.

ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.