பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது.

பதக்கப்பட்டியலில் சீனா 43 தங்கம், 30 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தம் 87 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என்று 15 பதக்கத்துடன் 15-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் 7-வது நாளான இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

மதியம் 1:00 மணி – பாரா துப்பாக்கி சுடுதல் – – பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் தகுதி சுற்று – மோனா அகர்வால், அவனி லெகாரா (தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி)

மதியம் 2:28 மணி – பாரா தடகளம் – பெண்கள் ஷாட் புட் – இறுதிப்போட்டி – பாக்யஸ்ரீ ஜாதவ்

மதியம் 3:20 மணி – பாரா வில்வித்தை – பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் 1/8 எலிமினேஷன் – பூஜா (தகுதிபெற்றால் இரவு 8.30 மணி முதல் நடைபெற உள்ள அடுத்த சுற்று ஆட்டங்களில் இவர் கலந்துகொள்வார்)

இரவு 10:38 மணி – பாரா தடகளம் – பெண்கள் 400 மீட்டர் – இறுதிப் போட்டி – தீப்தி ஜீவன்ஜி

இரவு 11:50 மணி – பாரா தடகளம் – ஆண்கள் உயரம் தாண்டுதல் – T63 இறுதிப்போட்டி – மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார்

(செப்டம்பர்4) 12:13 இரவு – பாரா தடகளம் – ஆண்கள் ஈட்டி எறிதல் – F46 இறுதிப் போட்டி – அஜீத் சிங், ரிங்கு, சுந்தர் சிங் குர்ஜார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.