அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு இதுவரை அறிக்கைப்படுத்தப்படவில்லை. ஆயினும் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரைடயாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:
இது தொடர்பாக 16000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அளவில் 5 வருட காலங்கள் பாடசாலை நேர அட்டவணைக்கு இணங்க பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார்கள். அதற்காக ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு இணங்க அவ்வாறு பணியாற்றினார்கள் என ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க முடியாது. அதனால் நீதி மன்றத்திற்கு சென்றுள்ளார்கள். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பாக பொறிமுறையொன்றைத் தயாரித்து, அவர்களை பயிலுநர்களாக ஆட்சேர்ப்புச் செய்து, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் இது தொடர்பாக இவ்வாறு உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் அமைச்சரவைக்குத் அறிவித்தார். அதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சரின் ஏனைய யோசனைகளையும் வைத்து, இந்த ஐந்து வருடங்களுக்கு பாடசாலைகளில் பாடசாலை நேரஅட்டவணைக்கு அமைவாக சேவையாற்றிய பயிலுநர்களை நீக்குவதற்கு எந்த முறையும் இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறு உள்வாங்க முடியாது என்பது உண்மை.
அதனால் அதற்காக எவ்வித முன்னனுபவங்களும் இன்றி இவர்களை அவசியமாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக ஜனாதிபதி விரைவாக இது தொடர்பாக ஆராய்ந்து பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு உடனடிக் குழுவொன்றுக்கு இதனை ஒப்படைத்தார்.
எங்களதும் கல்வி அமைச்சரினதும் ஜனாதிபதியினதும் அபிப்பிராயம் இவ்வாறு 05 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களை எப்பாடியாயினும் ஆசிரியர் சேவைக் உள்வாங்க வேண்டும்.
இந்த அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் காணப்படும் விதிகள் தொடர்பாக ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம். அதனால் அவ்வாறான அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எதிர்காலம் பிரகாசமின்றிக் காணப்படாது என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏனெனில் இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிடுகையில்:
2005, 2012 மற்றும் அதன்பின்னரான ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளை அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டது.
அதன்படி கல்வி அமைச்சின் கீழ் அரசாங்கப் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு தொடர்ந்தும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கு அவ்வாறான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரசாங்க ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது. ஆனால் அரசாங்கத்தினால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. என அமைச்சரவைப் பேச்சாளரிடம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இவ்வாறு தெளிவுபடுத்தினார்.