தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று (02) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
03. ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 7,500 ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்
தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் மூலம் டிஜிட்டல் நிலைமாற்றம் மிகவும் முக்கியமான கூறாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.