தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு,

கடந்த மாதம் 5ம் தேதி 3 படகுகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் மன்னார் வடமேற்கு குதிரை மலை கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்படித்ததாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி மீன்வளத்தை அழித்ததாகவும் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 20ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 20ம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி (இந்திய மதிப்பு சுமார் ரூ.42 லட்சம்) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், எஞ்சிய 10 பேருக்கு வரும் 10-ந்தேதி வரை காவலை நீட்டித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.