GOAT: `டைட்டில்ல அது இருக்கட்டும்' – விஜய் நடித்த இந்த மல்டி-ஸ்டார் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில்,

GOAT திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இதில் விஜயிடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்‌ஷி சௌத்ரி உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான விக்ரம், ஜெயிலர் எனப் பெரிய நடிகர்களின் படங்களிலும் பல திரைத்துறைகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

மல்டி இன்டஸ்ட்ரி-மல்டி ஸ்டார் படங்களுக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கும் நேரத்தில் தமிழ் திரைத்துறையின் நட்சத்திரங்களை சேர்த்து GOAT படத்தை சமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

விஜய் மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது இது முதன்முறை அல்ல, சொல்லப்போனால் மல்டி ஸ்டார் படங்கள் விஜய்க்கு எப்போதும் வெற்றியைக் கொடுத்திருக்கின்றன என்றே சொல்லலாம்.

இன்று தமிழ்சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக இருக்கும் சூர்யா விஜய்யுடன் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றது.

இன்று தல-தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயும், அஜித்தும் இணைந்து நடித்த திரைப்படம் `ராஜாவின் பார்வையிலே!

விஜய் – சூர்யா

விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த மற்றொரு திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். ரசிகர்கள் பலருக்கும் இந்தப் படம் ஆல்டைம் பேவரைட். இந்தப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தனது கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வந்து ஆக்‌ஷன், அதிரடி இல்லாமல் ஜாலியாக நடித்த திரைப்படம். இதில் ஶ்ரீகாந்த் மற்றும் ஜீவா விஜய்யுடன் படம் முழுவதும் பயணம் செய்தனர்.

‘நண்பன்’

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மோகன்லால், விஜய்யுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லா. இதில் அப்பா – மகன் போன்ற பாத்திரத்தில் இருவரும் ரகளையாக நடித்திருப்பர். க்ளைமேக்ஸுக்கு பிறகான நாடகங்களும் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.

ஜில்லா

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாஸ்டர். இதன் டைட்டில் கார்டில் மக்கள் செல்வன் என்ற அடைமொழியுடன் விஜய்சேதுபதியின் பெயர் இடம்பெற வேண்டுமென உறுதியாக இருந்தராம் விஜய்!

மாஸ்டர் 3rd look

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.