ஹோட்டல் அறையில் ஒளிந்திருக்கும் ரகசிய கேமிரா… கண்டுபிடிப்பது எப்படி…

ரகசிய கேமரா மூலம் தனிநபரின் அந்தரங்க தருணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதனை வைத்து மோசடி செய்பவர்கள் மிரட்டி அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  ரகசிய கேமராக்கள் பொதுவாக குளியலறை கண்ணாடிகள் அல்லது பல்புகளில் இருக்கலாம். சில சமயங்களில் படுக்கை அறையில்  வைக்கப்பட்டிருக்கலாம்.

விடுமுறையை கழிக்கவோ அல்லது வேலை நிமித்தமாகவோ ஹோட்டலில் தங்க நேரிடும் போது, ​​உங்கள் தனியுரிமையை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் இருக்கலாம் என்பதால், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன், அங்கு கேமரா ஏதேனும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். ரகசிய கேமிராவை ஸ்மார்ட்போன் மூலம் கண்டறிய சில வழிகள் உள்ளன. 

பிரபலமான நன்கு அறியப்பட்ட ஹோட்டல்களில் தங்குவது பாதுகாப்பானது தான். எனின்ம், சில காரணங்களால் மலிவான ஹோட்டலைத் தேர்ந்தெடுக்கும் போது, சில சமயங்களில் இது போன்ற ஆபத்து இருக்கக்கூடும். சமீபத்தில் சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால்,  மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது ரகசிய கேமரா இருக்கிறதோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தால், அதனை தீர்த்துக் கொள்வது நல்லது. இதனைசில எளிய முறைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ரகசிய கேமராக்களை கண்டறியும் முறை

உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் ஹோட்டல் அறையில் ரகசிய கேமராக்களைக் கண்டறியலாம். பெரும்பாலான ரகசிய கேமராக்கள் ஐஆர் ஒளியைப் பயன்படுத்துகின்றன. இது நம் சாதாரண கண்களுக்குத் தெரியாது. ஆனால் உங்கள் தொலைபேசியின் கேமராவால் பார்க்க முடியும். 

1. நீங்கள் தங்கியிருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தையும் ஆஃப் செய்து இருட்டாக ஆக்குங்கள்.

2. இப்பொழுது உங்கள் தொலைபேசியின் கேமராவை ஆன் செய்து அறையை ஸ்கேன் செய்யவும்.

3. உங்கள் மொபைலை மூலம் அனைத்து, துவாரங்கள், ஸ்மோக் டிடெக்டர்கள் மற்றும் அதுபோன்ற சிறிய இடங்களில் கவனம் செலுத்துங்கள்.

4. இவ்வாறு நீங்கள் ஸ்கேன் செய்யும் போது உங்கள் தொலைபேசியின் திரையில் ஒரு ஒளி ஒளிந்தது என்றால், அங்கு ஒரு ரகசிய கேமரா இருக்கலாம்.

ஃப்ளாஷ் லைட்  பயன்படுத்தி கண்டறிதல்

கேமரா லென்ஸ் அதிக ஒளியை பிரதிபலிக்க கூடியது. அறையில் இருண்ட இடங்களை டார்ச் லைட் அல்லது உங்கள் போனில் உள்ள ஃப்ளாஷ் லைட் மூலம் சோதனை செய்யலாம். நீங்கள் ஃப்ளாஷ் லைட் அடித்து பார்க்கும் இடத்தில் கேமரா இருந்தால், அது அதிக ஒளியை பிரதிபலிக்கும். எனவே, இதனை எளிதாக கண்டறியலாம். இந்த முறையை இருட்டில் தான் பயன்படுத்த வேண்டும். எனவே அறையில் விளக்குகளை அணைத்து விட்டு சோதித்து பார்க்க வேண்டும்.

ரேடியோ அதிர்வெண் டிடெக்டரைப் பயன்படுத்தி கண்டறிதல்

ரகசிய கேமராக்களைக் கண்டறிய போர்ட்டபிள் RF டிடெக்டர் (Radio Frequency detector) ஒரு நல்ல சாதனமாகும். இந்த சாதனம் வயர்லெஸ் கேமராவிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசையை கண்டுபிடிக்கிறது. இந்தக் கருவியின் மூலம் அறையை ஸ்கேன் செய்து, ரகசிய கேமரா உள்ளதா என்பதைக் கண்டறியலாம். உளவு பார்க்கும் சாதனம் உங்கள் அறையில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய இது எளிமையான மிகச்சிறந்த வழியாகும்.

 ரகசிய கேமிரா இருக்கும் சாத்தியமான இடங்கள்

1. தீ எச்சரிக்கை அலாரம் (Fire alarms)

3. புகை கண்டறியும் கருவிகள் (Smoke detectors)

4. ஸ்விட்ச் போர்டுகள் 

5. சார்ஜிங் போர்ட்

6. கண்ணாடிகள்

7. கடிகாரங்கள்

8. அறையில் உள்ள விளக்குகள்

9. காற்று துவாரங்கள் மற்றும் சீலிங்கில் பொருத்தபட்டுள்ள விளக்குகள் போன்ற சாதனங்கள் (Air vents and ceiling fixtures)

10. தொலைக்காட்சி பெட்டி (TV sets)

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.