Rashmika: சல்மான் கான், அல்லு அர்ஜூன், சத்ரபதி மகாராணி… PAN INDIA லைன்-அப்களில் அசத்தும் ராஷ்மிகா

இந்த ஆண்டு மட்டுமல்ல, வரும் 2025-ம் ஆண்டும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ராசியான ஆண்டுதான். கடந்த 2021-ல் அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘புஷ்பா’வின் அதிரி புதிரி ஹிட்டுக்கு பின், பான் இண்டியா ஸ்டார் ஆகிவிட்டதால், கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை டாப் ரேஸில் அசத்துகிறார் ராஷ்மி. அதிலும் ‘அனிமல்’ படத்தின் ஹிட்டுக்கு பின் இந்தியில் சல்மான்கான், விக்கி கௌஷல் என கெத்து காட்டும் ராஷ்மிகாவின் அசத்தல் லைன் அப்கள் வைத்துள்ளார்.

‘சிக்கந்தர்’ படம்

‘புஷ்பா’ படத்தின் வெற்றிக்கு பின், ‘புஷ்பா 2, தி ரூல்’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், சுனில், பிரகாஷ்ராஜ் என இதிலும் மல்டி ஸ்டார்களின் கூட்டணி உள்ளது. டிசம்பர் 6 ரிலீஸ் என அறிவித்துள்ளதால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஹைதராபாத்தில் பரபரக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசைக் கோர்ப்பு பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. இரண்டு பாடல்கள் இதுவரை வெளி வந்திருக்கிறது என்றாலும், எல்லோரும் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கிறாரக்ள். தீபாவளிக்கு டீசர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் `பான்’ இந்தியா படமாக உருவாகியுள்ளது.

‘புஷ்பா 2’வில்..

அதைப் போல ராஷ்மிகாவுக்கு டிசம்பர் அதிர்ஷ்டமான மாதம் போல, டிசம்பர் 6-ம் தேதி அவர் நடித்த இந்தி படமான ‘chhaava ‘ திரைக்கு வருகிறது. `சத்ரபதி சாம்போஜி மகாராஜா’வின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. இதில் ராஷ்மி சத்ரபதி மகாராணியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்கி கௌஷலுடன் அக்‌ஷய் கன்னா, சுனில் ஷெட்டி என பலரும் நடித்துள்ளனர். லக்ஷ்மன் உத்தேகர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

ராஷ்மி

இதனை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு பரபரக்கிறது. வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கடந்த ரம்ஜான் பண்டிக்கைக்கு தொடங்கியது. வரும் ஆண்டு 2025 ரம்ஜான் பண்டிக்கை வெளியீடாக அறிவித்துள்ளனர்.

இது தவிர சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனாவுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதரபாத், பாங்காக் என பல இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்போடு இதன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கின்றனர்.

chhaava

இது தவிர ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக்கிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ரெடியாகி வரும் இப்படம் பான் இண்டியா படமாக உருவாகி வருகிறது. ராஷ்மியுடன் தீக்‌ஷித் ஷெட்டி, கௌஷிக் மஹதா நடித்து வரும் இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார். அடுத்தாண்டு திரைக்குவ் வருகிறது. இது தவிர, ராஷ்மி நடிப்பில் ‘ரெயின்போ’ என்ற படமும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.