பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்

பாரீஸ்,

பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016 – 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73).

மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று கூறப்படுகிறது. அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். இந்நிலையில் மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.

இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மை பெறவில்லை. இந்த நிலையில்தான் அதிபர் இமானுவேல் மேக்ரானால், பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெறுவார்.

பிரான்ஸ் அரசியல் வராலாற்றில் முதன்முறையாக வயதான பிரதமர் அரசை திறம்பட நிர்வாகிக்க முடியுமா , சீர்திருத்தங்களை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வியை அங்கு உள்ள கூட்டணியில் கேள்வியை எழுப்பி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.