வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு உள்ளது. அவர் இன்னும் 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 50 சதங்களை அடித்த பிளேயர்கள் லிஸ்டில் இடம்பெறுவார். இந்த லிஸ்டில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். அவர்களின் வரிசையில் மூன்றாவது பிளேயராக சேர்ந்து கொள்ளும் சூப்பரான வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை அடித்தவர்களின் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்திய அணிக்காக 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 31.34 சராசரியில் 4231 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா 5 சதங்கள் மற்றும் 32 அரை சதங்கள் அடித்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 49.17 சராசரியில் 10866 ரன்கள் எடுத்துள்ளார் அவர். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களும், 57 அரை சதங்களும் அடித்துள்ளார்.
ரோஹித் சர்மா 59 டெஸ்ட் போட்டிகளில் 45.47 சராசரியில் 4138 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா 12 சதங்களும், 1 இரட்டை சதம் உட்பட 17 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இதுவரை அவர் 48 சதங்கள் அடித்திருக்கும் நிலையில், இன்னும் அரைசதங்களை அடிக்க 2 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் 50+ சதங்கள் அடித்த இந்தியர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் – 100 சதங்கள் (டெஸ்ட் – 51 மற்றும் ஒருநாள் – 49)
2. விராட் கோலி – 80 சதங்கள் (டெஸ்ட் – 29, ஒருநாள் – 50 மற்றும் டி20ஐ – 1)
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 100 சதங்கள்
2. விராட் கோலி (இந்தியா) – 80 சதங்கள்
3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 71 சதங்கள்
4. குமார் சங்கக்கார (இலங்கை) – 63 சதங்கள்
5. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 62 சதங்கள்
6. ஹாசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா) – 55 சதங்கள்
7. மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) – 54 சதங்கள்
8. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) – 53 சதங்கள்
9. ஜோ ரூட் (இங்கிலாந்து) – 50 சதங்கள்
10. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 49 சதங்கள்
11. ரோஹித் சர்மா (இந்தியா) – 48 சதங்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 100 சதங்கள்
2. விராட் கோலி (இந்தியா) – 80 சதங்கள்
3. ரோஹித் சர்மா (இந்தியா) – 48 சதங்கள்
4. ராகுல் டிராவிட் (இந்தியா) – 48 சதங்கள்
5. வீரேந்திர சேவாக் (இந்தியா) – 38 சதங்கள்
6. சௌரவ் கங்குலி (இந்தியா) – 38 சதங்கள்
7. சுனில் கவாஸ்கர் (இந்தியா) – 35 சதங்கள்
8. முகமது அசாருதீன் (இந்தியா) – 29 சதங்கள்
9. ஷிகர் தவான் (இந்தியா) – 24 சதங்கள்
10. விவிஎஸ் லட்சுமண் (இந்தியா) – 23 சதங்கள்