iPhone 16 series அறிமுகத்தினால்… அதிரடியாய் குறைந்த iPhone 15 Series விலைகள்

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 தொடர் நேற்று அறிமுகம் ஆனது.  iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை அறிமுகமான உடனேயே, ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.15 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 விலை ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.  

ஐபோன் 15 சீரிஸ், 14 சிரிஸ் பழைய விலை மற்றும் புதிய விலை விபரம்

iPhone 15 128GB மாடல்: பழைய விலை ₹79,600, புதிய விலை   ₹69,900

iPhone 15 256GB மாடல்: பழைய விலை ₹89,600, புதிய விலை  ₹79,900

iPhone 15 512GB மாடல்: பழைய விலை  ₹1,06,600, புதிய விலை  ₹99,900

iPhone 15 Plus 128GB மாடல்: பழைய விலை ₹ 89,600, புதிய விலை ₹ 79,900

iPhone 15 Plus 256GB மாடல்: பழைய விலை  ₹99,600, புதிய விலை ₹89,900

iPhone 15 Plus 256GB மாடல்: பழைய விலை 1,19,600, புதிய விலை 1,09,900

iPhone 14 128GB மாடல்: பழைய விலை ₹69,600, புதிய விலை ₹59,900

iPhone 14 256GB மாடல்: பழைய விலை ₹79,600, புதிய விலை  ₹69,900

iPhone 14 512GB மாடல்: பழைய விலை  ₹99,600, புதிய விலை ₹89,900

ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் திரையையும், ஐபோன் 15 பிளஸ் 6.7 இன்ச் திரையையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் (iphone) A16 பயோனிக் சிப் உள்ளது. தரமான புகைப்படங்களை கிளிக் செய்ய உதவும் 48MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 26 மணிநேரம் நீடிக்கும் திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளது.  இதை USB-C போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம்.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இரண்டிற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் திரை அளவு மட்டுமே. 15 ப்ரோ 6.1 மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 512ஜிபி வரை உள்ளக சேமிப்பு உள்ளது. சேமிப்பகம் தீர்ந்துவிட்டால், கிளவுட் சேமிப்பகத்தைப் பயன்படுத்தலாம். இரண்டு சாதனங்களிலும் A17 PRO சிப் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இரண்டு ஐபோன்களிலும் ஆக்ஷன் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் 26 மணிநேரம் நீடிக்கும் திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளது. இதை USB-C போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.