ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
64வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசிய HMSI சிஇஓ திரு.சூட்சுமூ ஓட்னி கூறுகையில், மின்சார ஸ்கூட்டர் வெளியீடு ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாகிவிட்டது என்று அவர் கூறினார். இருப்பினும், இப்போது முதல் எலெக்ட்ரிக் மாடல் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டபடி வரவுள்ள ஆக்டிவா இ-ஸ்கூட்டர் பேட்டரி ஸ்வாப் மற்றும் ஃபிக்சிட் பேட்டரி என இரண்டு விதமான ஆப்ஷனிலும் வர உள்ளது. பேட்டரி ஸ்வாப்பிங் செய்வதற்கு இந்நிறுவனத்தின் ஹோண்டா e-power நிறுவனத்தை இந்நிறுவனம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இதற்கான பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை இந்நிறுவனம் நிறுவிக்கொள்ளும் எனக் குறிப்பிடப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள் மூலம் பேட்டரி ஸ்டாப்பிங் நிலையங்களை திறப்பதற்கான முயற்சியை ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சிறப்பான ரேஞ்ச் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்புகின்ற பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் தொடுதிரை சார்ந்த டிஜிட்டல் கிளஸ்டர் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெட்ரோல் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்ற ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. போட்டியாளர்களும் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. குறிப்பாக சுசூகி, யமஹா போன்ற நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்திற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
உதவி – NDTV Auto