3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 1 ஆவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது.

மேலும் போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நேற்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக 10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.