அணு உலை கழிவுகளை அகற்றும் ரோபோ- புகுஷிமாவில் பணிகள் தொடங்கின

டோக்கியோ

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. அங்கு 3 அணு உலைகள் செயல்பட்டன.

கடல் நீர் புகுந்ததால் அணுமின் நிலையம் செயல்படுவது நிறுத்தப்பட்டது. அணு உலைகளில் எற்பட்ட சேதம் காரணமாக அணுக் கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.

இந்த கழிவுகள் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை பாதுகாப்புடன் அகற்ற ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் அந்த முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

தற்போது அங்குள்ள அணுக் கழிவுகளின் அகற்ற ரோபோ பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் இன்று தொடங்கி உள்ளன. கதிர்வீச்சு அளவை அறிந்து கொள்ள சிறிய அளவில் அதாவது 3 கிராம் அளவுக்கு அணுக் கழிவை எடுத்து வருவதற்காக ரோபோ சென்று உள்ளது.

இந்த பணி 10 நாட்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தினசரி 2 மணி நேரம் மட்டுமே பணிகள் நடைபெறும். கதிர்வீச்சை கருத்தில் கொண்டு தலா 6 பேரை கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவும் 15 நிமிடம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படும்.

3 டன் வரை அணுக் கழிவு அங்கு இருக்கும் என்று அரசு கருதுகிறது. இதை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் 100 ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ரோபோ எடுத்துவரும் மாதிரியை ஆய்வு செய்த பின்னர் தான் கழிவை அகற்றுவது எப்படி என்பது முடிவாகும் என்று ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.