ஹனோய்,
வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் சமீபத்தில் உருவான யாகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்தபோது, மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதில் 9 பேர் உயிரிழந்தனர். இதன்பின் கடந்த ஞாயிறன்று, சூறாவளி வலுவிழந்தது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு விட்டு சென்றுள்ளது.
இதன் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்து உள்ளனர். 70 பேரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பலர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் பலியானார்கள் என்பது கவனிக்கத்தக்கது.