தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள் விநியோகித்தல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் இலத்திரணியல், அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் அவற்றை வெளியிடுதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.