ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது. முதன்முறையாக EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வந்த ஜூம் 125ஆரில் 14 அங்குல வீல் பெற்று எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.
ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள டிவிஎஸ் மோட்டார் என்டார்க் 125, டியோ 125, ரேஇசட் ஆர், அவெனிஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ஜூம் 125 எதிர்கொள்ள உள்ளது. இந்த ஸ்கூட்டரில் சமீபத்தில் வந்த டெஸ்டினி 125 மாடலில் இருந்து பெறப்பட்ட எஞ்சின் பயன்படுத்தினாலும் மாறுபட்ட வகையில் எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். எனவே, ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் உள்ள 124.6cc என்ஜின் அதிகபட்சமாக 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 14-இன்ச் அலாய் வீல் பெற்றிருக்கும்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட மாடலை போலவே பின்புறத்தில் எல்இடி டெயில்லைட், டர்ன் இன்டிகேட்டர் போன்றவை எல்லாம் கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டெஸ்டினி 125 விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஜூம் 125ஆர் விற்பனைக்கு அனேகமாக அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.