தமிழ் கமர்ஷியல் திரைப்படம் என்றால் நகைச்சுவை இல்லாமல் நிறைவடையாது. நகைச்சுவைக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொட்டகைக்குச் சென்ற படங்கள் ஏராளம். வடிவேலுவின் நகைச்சுவை என்றால் சொல்லவே தேவையில்லை!
இன்று போல யூடியூபில் விமர்சனம் பார்த்து அல்ல, போஸ்டரில் வடிவேலுவின் முகத்தைப் பார்த்து திரையரங்குக்குச் செல்லும் பட்டாளம் ஒன்று இருந்தது, இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் காமெடியாகவும், மாமன்னன் படத்தில் எமோஷனலாகவும் பார்த்த வடிவேலு, தசாப்தங்களுக்கு முன்னரே இந்த உணர்ச்சிகளின் உச்சங்களைக் காட்டியவர்.
Fake Tough Guy வகையில் காட்சியின் தொடக்கத்தில் முறுக்கேறிய வீரனைப் போலவும், இறுதியில் காலில் விழுவதும் என நகைச்சுவைக் காட்சிகள் வடிவேலுவின் அல்ட்ரா ஸ்ட்ராங் சோன். கைப்புள்ள, ஸ்டைல் பாண்டி என முத்திரைப் பதித்த கேரக்டர்களில் நடித்தவர் வடிவேலு.
மீம்களில் தினமும் பார்க்கும் அவரது திரைப்படங்களை மிஸ் செய்திருப்போமா? ஒருவேளை 2கே கிட்ஸ்கள் அவரது அசரவைக்கும் நகைச்சுவையையோ, அழ வைக்கும் எமோஷன்களையோ மிஸ் செய்திருக்கலாம் என்ற ஐயத்தால் சில சஜஷன்கள்…
எம்டன் மகன்
சுந்தரா டிராவல்ஸ்
காதலன்
வெற்றிக்கொடி கட்டு
பாஞ்சாலங்குறிச்சி
ப்ரெண்ட்ஸ்
வின்னர்
கார்மேகம்
கண்ணுக்கு கண்ணாக
இந்தப் படங்களின் காமெடி காட்சிகள் எப்போதும் நிலைத்திருக்கும்.
பன்னாரியம்மன்
சங்கமம்
சிங்கார வேலன்
தேவர் மகன்
இவற்றில் பெர்ஃபாமராக கலக்கியிருப்பார் வடிவேலு. சினிமா ரசிகர்கள் மிஸ் செய்யவே கூடாத படங்கள் இவை. உங்களுக்குப் பிடித்த வடிவேலு காமெடி எது என்று கமெண்ட் செய்யுங்கள்!