சவுதாம்ப்டன்,
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது . டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 பந்தில் அரை சதமடித்தார். அவர் 23 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்..முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 86 ரன்களை சேர்த்தது. ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 10 ரன்னிலும் வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது .
அந்த அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லிவிங்ஸ்டோன் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 20 ரன் எடுத்தார்.இறுதியில், இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபாட் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.