புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் – பரீட்சை ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாம் பகுதி நடைபெறவுள்ளதுடன், அதே தினம் காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாம் பகுதியும் நடைபெறும்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதுடன், சிங்கள மொழி மூலம் 244,092 பரீட்சார்த்திகளும் தமிழ் மொழி மூலம் 79,777 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு குறித்த நேரத்தில் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், தேவையற்ற அழுத்தங்கள் இன்றி மிகவும் நிதானமான மனதுடன் பரீட்சைக்கு முகம் கொடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாணவர்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.