ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் படங்கள் முதன்முறையாக இனையத்தில் கசிந்துள்ளது.
HF100, HF டீலக்ஸ் என இரண்டு மாடல்களுக்கு அடுத்தப்படியாக பிரபலமான ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec, மற்றும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec 2.0, இது தவிர பேஷன் பிளஸ் போன்ற மாடல்களில் உள்ள மிகவும் நம்பகமான 97.2cc என்ஜின் அதிகபட்சமாக 7.91hp பவர் மற்றும் 8.05Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள பைக்கில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் டூயல் ரியர் ஸ்பிரிங்ஸ், முன் மற்றும் பின்புற டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து தனது பழைய மாடல்களை புதுப்பிக்கப்பட்டு மற்றும் பட்ஜெட் விலையில் இந்த மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டு வருவதற்கான காரணம் தொடர்ந்து கம்யூட்டர் பைக் சந்தைக்கான குறைந்த விலை மாடல்களை அறிமுகம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.