அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக செய்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் ஃபோர்டு மீண்டும் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது
இது குறித்து லைவ்மின்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஜேஎஸ்டபிள்யூ ஏற்கனவே சென்னை ஃபோர்டு ஆலையை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தது. ஆனால் திடீரென ஃபோர்டு நிறுவனம் சென்னை ஆலையின் விற்பனை முடிவை கைவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து முதல் வின்ட்சர் இவி காரை விற்பனைக்கு வெளியிட்டு இருக்கின்ற நிலையில் கூடுதலாக ஃபோர்டு உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதனால் போர்டு ஏற்கனவே இந்திய வருகை உறுதி செய்துள்ள நிலையில் தற்போது ஃபோர்டு ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்தால் அது இந்தியாவிலிருந்து கார்களை விற்பனை செய்யவும் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவும் தயாராகி வருவதாக தெரிகின்றது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவே கூறப்படுகின்றது ஆனால் முழுமையான விபரங்கள் எதுவும் இரு நிறுவனமும் உறுதி செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.
ஃபோர்டு வெளியிட்ட அறிக்கையில் சென்னை ஆலையை ஏற்றுமதிக்காக மட்டுமே தயார் செய்வதாக குறிப்பிடுகின்றது ஆனால் ஒருவேளை ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்தால் இந்தியாவிலும் ஃபோர்டு கார்களை மீண்டும் எதிர்பார்க்கலாம்.