இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம்.. 

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2025 முதல் தனிப்பட்ட வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.