கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோவையில் கடந்த புதனன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் அவருடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். […]