பாசிப்பயறுக்கான உத்தரவாத விலை ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணாவர்தன, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு எழுத்து மூலமான பணிப்புரையை நேற்று (13) விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக் குழுவினால் சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கட்டமைப்பு ஊடாக பிரதேச அபிவிருத்தி மற்றும் விவசாய குழுக்களினால் இடைப்போகத்தில் இப்பாசிப்பயறு உற்பத்திக்கான பொருத்தமான விலையை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்த வேண்டும் .
அத்துடன் விவசாயிகளிடையே பாசிப்பயறு உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, வெற்றிகரமான பாசிப்பயறு அறுவடையை சந்தைக்கு வழங்குவதுடன், அதற்குத் தற்போது மிகவும் சாதாரண மொத்த விலை காணப்படுவதாகவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் பாசிப்பயறு அறுவடை பாரிய அளவில் சந்தைக்கு வரும் போது, இந்த சந்தை விலை வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைவதை தவிர்ப்பதற்கு விரைவாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை பரிசீலனை செய்து , விரைவில் பாசிப்பயறுக்கான உத்தரவாத விலையை அமுல்படுத்துவதற்காக அமைச்சுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட விலையை வெளியிடுமாறும் பிரதமர் தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.