சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி பி2 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் ஃபுள் ஹெச்டி AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 50 + 8 மெகாபிக்சல் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
- 5,200mAh பேட்டரி
- 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங்
- 5ஜி சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்த போனின் விலை ரூ.21,999 முதல் ஆரம்பமாகிறது