சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் – தொகுப்பாளர் அஷ்வத்துக்கும் திருமணம் நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது.
சன் டிவியில் ‘வணக்கம் தமிழா‘ நிகழ்ச்சியின் மூலம் மக்கள்மனதில் பரிச்சயமானவர் அஷ்வத். இவர் நடித்திருந்த ‘Inspector Rishi’ வெப்சீரிஸ் இவருக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் கண்மணி.
அஷ்வத்துக்கும் கண்மணிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று தங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் திருமணம் நெருக்கமான நபர்களைக் கொண்டு நடைபெறும் எனப் பதிவிட்டிருந்தனர்.
அதன்படி பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றிருக்கிறது.
இந்தத் திருமண நிகழ்வில் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
வாழ்த்துகள் அஷ்வத் – கண்மணி
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…