பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா விண்கலம்!

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் குழுவினர் விண்வெளியில் ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்பினர். புளோரிடா கடலில் டிராகன் கேப்ஸ்யூல் லேண்ட் ஆனது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமூக வலைதள பதிவு மூலம் பகிர்ந்துள்ளது.

வணிக ரீதியான விண்வெளி பயணத்தில் இது மைல்கல் சாதனை என நாசா தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் கோடீஸ்வரர் ஐசக்மேன், ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை வீரர் ஸ்கார் போடீட் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் ஷாரா கில்லீஸ், அன்னா மேனன் ஆகியோர் அங்கம் வகித்தனர். கடந்த 11-ம் தேதி இவர்களது விண்வெளி பயணம் தொடங்கியது.

பூமிக்கு மேலே சுமார் 700 கிலோ மீட்டர் உயரத்தில் இவர்கள் விண்வெளி நடை பழகினர். அதுவும் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத ஐசக்மேன், ஷாரா கில்லீஸ் ஆகியோரும் விண்வெளியில் மிதந்தபடி நடை மேற்கொண்டனர். இந்த பயணத்தில் சுமார் 36-க்கும் மேற்பட்ட விஞ்ஞான ரீதியிலான சோதனைகளை மேற்கொண்டனர்.

முக்கியமாக 1972 அப்போலோ மிஷனுக்கு பிறகு விண்வெளியில் அதிக தூரம் பயணித்து சாதனை படைத்தனர். சுமார் 1400 கிலோ மீட்டர் தூரம் வரை அவரகளது பயணம் அமைந்திருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.