YouTubeல இருந்து சினிமாவுக்கு வர்றது Bad Idea – `Erumasaani' Vijay Couple Interview| High On Kadhal

கல்யாணதுக்கு அப்றோம் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறதுனா நிறைய பேர் யோசிப்பாங்க. உங்களுக்கு சேர்ந்து நடிக்கிறதுல பயம் டென்சன் எதாவது இருந்தீச்சா? 

” எனக்கு பர்ஸ்ட் ஷாட் வைக்கும் போது பயமாத்தான் இருந்தீச்சு. ஆனா விஜய் கூடத்தான் நடிக்கிறோம்ங்கிறதால கம்போர்ட்டாவும் இருந்தது.”

யூடியூப்பில் இருந்து சினிமாவுக்கு வர்ற பயணம் எப்படி இருந்தது ?

”  இன்னுமே என்னை ஒரு யூடியூப்பராகத் தான் அடையாளப் படுத்துறாங்க. யூடியூப்புல இருந்து சினிமாவுக்கு வர்றது ஈஸியான விஷயம் தான். ஆனா அதுக்கான சரியான வழி அமையணும். அப்படி அமைஞ்சாத்தான் சரியான இடதுக்கு நம்மாள போக முடியும்.” 

வீடு வாங்குறதுங்கிறது நிறைய பேருக்கு கனவா இருக்கும். அந்த கனவை நீங்க நிறைவேத்திட்டீங்க அதைப் பத்தி சொல்லுங்க? 

“ஒரு சின்ன வீட்டுல தான் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது. அதே ரோட்டுலயே பெரிய வீடு கட்டணும்கிற ஆசையில தான் எங்க அம்மா அப்பா இருந்தாங்க. இப்போ இப்படி வளர்ந்து அந்த வீட்டை கட்டிட்டோம். ரோட்டுல போறவங்கலாம் இது விஜய் வீடுன்னு சொல்லும் போது சந்தோசமாக இருந்தது” என்றார்.

இவ்வாறு சீரிஸ் பற்றிய பல அனுபவங்களையும், தங்களது வாழ்க்கை அனுபவங்கலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.