Siddharth: `நீ என் சூரியன்' – அதிதி ராவைக் கரம்பிடித்த சித்தார்த்; வைரலாகும் திருமணப் புகைபடங்கள்

சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

`பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதிதி ராவ்.

சித்தார்த் – அதிதி ராவ்

சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிருந்தே இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே சித்தார்த்தும் – அதிதி ராவும் திருமணம் நிச்சயமானதை சமீபத்தில் உறுதிசெய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் கோயிலில் இத்திருமணம் நடைபெற்று இருக்கிறது.

‘நீ என் சூரியன், என் சந்திரன் மற்றும் என் நட்சத்திரம்’ என்று பதிவிட்டு திருணப்புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். திருமணம் செய்துகொண்ட சித்தார்த்திற்கும்- அதிதி ராவுக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.