Vettaiyan: அனிருத்தின் நிகழ்ச்சி; நெல்சன்; லோகேஷ், பகத்துக்கு அழைப்பு; இசை வெளியீட்டு விழா

ரஜினியின் ‘வேட்டையன்’ அடுத்த மாதம் (அக்டோபர்) 10ம் தேதி திரைக்கு வருகிரது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிளான ‘Manasilaayo’ பாடல் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. அடுத்து படத்தின் இசை வெளீயீடு விழா குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியிருக்கிறது.

மனசிலாயோ.. பாடலில்..

சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோவான ‘மனசிலாயோ’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்துள்ளனர்.

அனிருத் இசையில், விஷ்ணு எடவன், சூப்பர் சுப்பு ஆகியோர் எழுதியுள்ளனர். அந்தப் பாடலை தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு விழா எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் இது. மல்டி ஸ்டார் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர், யோகிபாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் ஒரு கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும் ரஜினியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இதுவரை பல படங்களில் வில்லனாக மிரட்டி வந்த பகத் பாசில், இந்த படத்தில் வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் 20ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

மஞ்சு வாரியர்

ரஜினியைப் பொறுத்தவரை, அவரது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் தவறாமல் பங்கேற்பதுடன், படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களையும் பாராட்டுவதுடன், முத்தாய்ப்பாக எதாவது ஒரு விஷயத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். சமீபத்திய ‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ ஆடியோ ஃபங்ஷன்களுக்கு கூட அவர் வந்திருக்கிறார். அப்படி ‘வேட்டையன்’ விழாவிற்கும் அவர் வருகை தருகிறார். படத்தில் நடிக்கும் அமிதாப், ராணா, பகத் பாசில் எனப் பலருக்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் அனிருத்தின் லைவ் கச்சேரி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை அனிருத் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

‘வேட்டையன்’ படத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் தான், கமலின் ‘இந்தியன் 3’படத்தையும் தயாரித்து வருவதால், இதன் இசைவெளியீட்டு விழாவிற்கு கமலையும் அழைக்க விரும்புகின்றனர். தவிர, ரஜினியின் முந்தைய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், ‘கூலி’ லோகேஷ் கனகராஜ் என அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர். ஆனாலும், படத்தில் நடித்த ரஜினி உள்பட அத்தனை கலைஞர்களின் பங்கேற்பும் நிச்சயம் இருக்கும் என்கிறர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.