டிரையம்ப் வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 பைக் மாடலில் பல்வேறு வசதிகள் ஸ்பீடு 400 மாடலை விட குறைவான விலையில் வழங்கும் நோக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த எஞ்சின் பவர் முதல் டெலிஸ்கோபிக் ஃபோர்க் என பல மாற்றங்கள் உள்ளன.
Triumph Speed 400 T4
தோற்ற அமைப்பில் ஸ்பீடு 400 போலவே அமைந்தாலும் டிரையம்ப் ஸ்பீடு T4 பைக்கில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு, பின்புறத்தில் 130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் உள்ளது. இந்த மாடலில் 110/80 R17 மற்றும் 140/70 R17 டயர் எம்ஆர்எஃப் Zapper FX2 வழங்கப்பட உள்ளது.
முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. முழுமையான எல்இடி விளக்குகள், மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் கிடைக்கின்றது.
TR சீரிஸ் என்ஜின் பெறுகின்ற ஸ்பீடு T4 மாடலில் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,000 rpm-ல் 30.6 hp பவரையும், 5,000 rpm-ல் 36 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்பீடு 400யை விட 10 % கூடுதல் மைலேஜ் மற்றும் 85 % டார்க் 2,500ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு, சிவப்பு, மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களை பெற்றுள்ள ஸபீடு T4 400 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் உள்ள 350சிசி-500சிசி பிரிவில் கிடைக்கின்ற பல்வேறு மாடல்கள் உள்ளன.
Triumph Speed T4 – ₹ 2,17,000
(EX-showroom)
முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விரைவில் டெலிவரி துவங்கப்பட உள்ளது.