பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் வெளியான ஸ்பீடு 400 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிதாக 4 நிறங்களை பெற்று சிறிய அளவிலான மேம்பாடுகளுடன் ரூ.2.40 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அதிகப்படியான ஃபோம் பெற்ற இருக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
2024 Triumph Speed 400
டிரையம்ப் ஸ்பீடு 400-ல் 10 மிமீ வரை கூடுதல் ஃபோம் பெற்ற இருக்கை, அதிக புராஃபைல் பெற்ற முன்பக்க 110/80 R17 மற்றும் 150/70 R17 இரண்டும் Vredestein ரேடியல் டயர், 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் ஆகியவற்றுடன் ரேசிங் மஞ்சள், மெட்டாலிக் வெள்ளை, ரேசிங் சிவப்பு, மற்றும் கருப்பு என நான்கு நிறங்களுடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உள்ளது.
தொடர்ந்து அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. 2025 மாடலில் தொடர்ந்து TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
176 கிலோ எடை கொண்ட 43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில்130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் ரைடு-பை-வயர் த்ரோட்டில், முழுமையான எல்இடி விளக்குகள், மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் கிடைக்கின்றது.
- MY25 Triumph Speed 400 – ₹ 2,40,000
(Ex-showroom)