நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1ஆம் தேதி வரை நாட்டில் எங்கும் புல்டோசர் நீதி என்ற பெயரில் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லி, அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பெயரில் சிறுபான்மையினரின் வீடுகள் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் […]