திருமணத்திற்கு முன் சித்தார்த் – அதிதி இருவரும் இணைந்து ‘vogue’ என்ற செய்தி இதழுக்கு அளித்த பேட்டி இன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
`பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதிதி ராவ். சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர்.
அப்போதிருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருணப்புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். திருமணம் செய்துகொண்ட சித்தார்த்திற்கும்- அதிதி ராவுக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன் இருவரும் இணைந்து ‘vogue’ என்ற செய்தி இதழுக்கு அளித்த பேட்டி இன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் சித்தார்த், “ஐந்து நிமிடத்திற்குள் நான் நிறைய தவறுகளைச் செய்துவிடுவேன். அதனால் ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை விட ‘ஸாரி’ என்ற வார்த்தையைத்தான் அதிதியிடம் அதிகம் பயன்படுத்துவேன். நான் அவரிடம் பேசும் வார்த்தைகளில் தொண்ணூறு சதவீதம் ஸாரி என்ற வார்த்தையும் மீதமுள்ள பத்து சதவீதம் நன்றி என்ற வார்த்தையாகவும்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
காலையில் அதிதி எழுந்த உடன் செய்யும் முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்று சித்தார்த்திடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சித்தார்த், “அதிதி எழுந்தவுடன் என்னுடைய விருப்பம் இல்லாமல் என்னை எழுப்பி விட்டுருவார். எனது நாள் தொடங்கிவிட்டது என நானும் அழுகையுடன் எழுந்திருப்பேன். ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாயைப் பறித்துக்கொண்டதுபோல் அவர் என்னைப் பார்த்து சந்தோஷப்படுவார்” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…