சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் மழைநீர் வடிகால்களின் 51 டெண்டர்கள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளின் இரண்டு டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பண ஆதாயத்துடன் டெண்டர்கள் வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. […]