இந்தியாவில் iPhone 16 விற்பனை தொடங்கியது… சலுகை மற்றும் தள்ளுபடு விபரங்கள்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று (செப்டம்பர் 20)  தொடங்கியது. இந்தத் தொடரில் நான்கு மாடல்கள்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max மற்றும் iPhone 16 Plus ஆகிய மாடல்கள் அடங்கும். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை செப்டம்பர் 9 ஆம் தேதி  அறிமுகப்படுத்திய நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி அதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கான டெலிவரிகளும் இன்று தொடங்குகிறது.

iPhone 16 விலை, சலுகைகள் மற்றும் தள்ளுபடி விபரம்

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 தொடர் உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு இப்போது விற்பனைக்கு தயாராக உள்ளது. அதன் விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16  விலை –  ரூ.79,900

ஐபோன் 16 பிளஸ் விலை –   ரூ.89,900

ஐபோன் 16 ப்ரோ விலை – ரூ 1,19,900 

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலை – ரூ 1,44,900

இந்தியாவில் உள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களில் (மும்பை மற்றும் டெல்லியில்) அல்லது Amazon, Flipkart, Croma மற்றும் பிற கடைகளில் இந்த போன்களை வாங்கலாம். ஆனால், சில சலுகைகள் மூலம் இந்த போன்களை குறைந்த விலையிலும் வாங்கலாம்

iPhone 16 வாங்கும் போது இந்தியாவில் கிடைக்கும் சலுகைகள் விபரம்

iPhone 16ஐ வாங்கினாகும் போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ICICI வங்கி கார்டுகளில் இருந்து 5000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கின்றது.  மேலும், 3-6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI ஆப்ஷனும் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பழைய ஐபோனை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்துவதன் மூலமும் தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பழைய ஐபோன் 13 ஐ எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். ஆப்பிள் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது, போனின் நிலைக்கு ஏற்ப ரூ.4000 முதல் ரூ.67,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி புதிய iPhone 16 ஐ வாங்க பயன்படுத்தப்படலாம். 

ஐபோன் வண்ணம்

ஃபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவை அல்ட்ராமரைன், டீல், பிங்க், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வருகின்றன. ப்ரோ மாடல்கள் பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் டெசர்ட் டைட்டானியம் வண்ணங்களில் வருகின்றன. 

ஐபோன் திரை அளவு

ஐபோன் 16 6.1 இன்ச் திரையையும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் திரையையும் கொண்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் திரையையும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் திரையையும் கொண்டுள்ளது. இது ஐபோனில் மிகப்பெரிய அளவிலான திரை ஆகும். 

ஐபோன் 16 தொடர்: அம்சங்கள்

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவற்றில், மிக வேகமாக இயங்கும் ஆப்பிளின் புதிய A18 சிப்பைக் கொண்டுள்ளன. ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் ஏ18 ப்ரோ சிப் உள்ளது. இது A18 சிப்பை விட வேகமானது  என்பதோடு பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

iPhone 16 சீரிஸ் போன்கள் உள்ள கேமரா

ஐபோன் 16 இப்போது மிகச் சிறந்த 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் கேமிரா 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் புகைப்படங்களை இணைத்து தெளிவான 24 மெகாபிக்சல் படத்தை உருவாக்குகிறது. இது ஜூம் செய்வதற்கான 2x டெலிஃபோட்டோ ஆப்ஷனும் உள்ளது. மேலும் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்களை எடுக்கும். புரோ மாடலில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.