IPL 2025: சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாகும் ரோஹித் சர்மா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

இந்திய அணிக்கு கேப்டனாக உள்ள ரோஹித் சர்மாவை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்று இருந்தார் ரோகித் சர்மா. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளார். இருப்பினும் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக விளையாடவில்லை, மேலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்திருந்தனர். குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்திருந்தார், இதன் காரணமாக அவரை மும்பை அணிக்கு கேப்டன் ஆக்கியது நிர்வாகம். இருப்பினும் ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தலைமையிலும் 10வது இடத்தையே பிடித்தது .மேலும் முதல் அணியாக லீக் சுற்றில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் முடிந்த சில மாதங்களில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தார். 

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் மும்பை அணி ரோகித் சர்மாவை விடுவிக்க உள்ளது. ரோகித் சர்மா ஏலத்திற்கு வந்தால் அவரை எடுக்க ஹைதராபாத் அணி தயாராக உள்ளது. சமீபத்திய நாட்களில் ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைய போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு இருக்கிறது ஆனாலும் இதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ரோஹித் சர்மா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் பல அணிகள் அவரை எடுக்க நிச்சயம் போட்டி போடும். ஐபிஎல் 2011 மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். இதுவரை மும்பை அணி வென்ற 5 கோப்பைகளும் ரோஹித்தின் தலைமையில் தான்.

ஐபிஎல் 2024

ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் பேட் கம்மின்ஸ் ரூ 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். அவரை கேப்டனாக நியமித்தது அணி நிர்வாகம். அவரது தலைமையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறியது, இருப்பினும் தோல்வியடைந்தது. இறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.