Cinema Roundup: சூர்யாவும் நவம்பர் மாத ராசியும்; ஜாக்கி சான் ரிட்டன்ஸ் – டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சூர்யாவும் நவம்பரும்!

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், அன்றைய தினம் ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸாகிறது என லைகா நிறுவனமும் அறிவித்தது. இதை தொடர்ந்து மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என உறுதிப்படுத்தியிருந்தார். தற்போது புதிய ரிலீஸ் தேதியாக நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது.

Kanguva release date

சூர்யாவுக்கும் இந்த நவம்பர் மாதத்திற்கும் ஒரு கனெக்ட் இருக்கிறது. ஆம், அவர் நடிப்பில் நவம்பர் மாதத்தில் வெளியான அனைத்துப் படங்களும் மெகா ஹிட்தான். அந்த வரிசையில் நவம்பர் மாதத்தில் வெளியான வாரணம் ஆயிரம், வேல், சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களின் வெற்றி நிலவரம் பிளாக்பஸ்டர்தான். இந்த வரிசையில் ‘கங்குவா’ திரைப்படமும் இணைந்துக் கொள்ளும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு!

கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்பதையும் அறிவித்திருந்தார்கள். சிம்பு, த்ரிஷா ஆகியோரும் இப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரபரப்பாகப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் கூடிய விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

Thug life and sunil shetty

சுனில் ஷெட்டி நெகிழ்ச்சி!

தந்தையின் ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பது ஒரு மகனுக்கு முக்கியமான விருப்பமாக பக்கெட் லிஸ்டில் இருக்கும். ஒரு நெகிழ்ச்சியடைய வைக்கும் விஷயத்தைச் செய்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. இது குறித்து அவர், “என்னுடைய தந்தை சிறுவயதிலேயெ மங்களூரூவிலிருந்து ஓடி வந்தவர். அங்கிருந்து வந்தவர் ஒரு ஹோட்டலில் வேலைப் பார்த்தார். அங்கிருந்துதான் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். தற்போது அவர் வேலைப் பார்த்த ஹோட்டல்களை நான் வாங்கிவிட்டேன்.” என நெகிழ்ச்சியாக இந்த விஷயத்தைச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

ஜாக்கி சான் கம்பேக்!

ஜாக்கி சான் நடிப்பில் ‘ஏ லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் சீனாவில் வெளியாகியிருந்தது. 2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி மித்’ திரைப்படத்தின் சீக்குவல்தான் இத்திரைப்படம். ‘தி மித்’ திரைப்படத்தின் இந்திய ரசிகர்களுக்காக இந்த படம் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.

Jackie chan and vettaiyan

வேட்டையன் கதாபாத்திரங்கள்!

‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் டீஸர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயரை படக்குழு ஒவ்வொன்றாக அறிவித்திருக்கிறது. அதில் அமிதாப் பச்சன் இந்த படத்தில் சத்யதேவ் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரை தாண்டி ஃபகத் பாசில் – பேட்ரிக்காகவும், ரானா – நட்ராஜாகவும், மஞ்சு வாரியர் – தாராவாகவும், துஷாரா – சரண்யாவாகவும், ரித்திகா சிங் – ரூபாவாகவும் களமிறங்கவுள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.